நன்னெறி மேலாண்மை முறைகள் :: முன்னுரை

நன்னெறி மேலாண்மை முறைகள் என்பது, நீர், நிலம் மற்றும் இராசயன பொருட்களை சரியாக கையாண்டு சுற்றுப்புறச்சூழல் மாசுபடாமல், இயற்கை வளத்தை காக்க உழவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாகும். நன்னெறி மேலாண்மை முறைகள், 1999 ஆம் ஆண்டு, ஃபுளோரிடா நீர்ப்பிடிப்புப் பகுதி பாதுகாப்பு சட்டம் அமுலாக்கப்பட்ட போது உருவாக்கப்பட்டது. வேளாண்மை செயல் முறைகளால் தாதுப் பொருட்கள் (நைட்ரஜன், பாஸ்பரஸ்) இராசயனப் பொருட்கள் மற்றும் வண்டல் மண் மற்றும் நீர் வெளியேற்றத்தால் நீர் ஆதாரங்களும் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் மாசுபடுவதற்கு காரணமாகின்றதால் நன்னெறி மேலாண்மை முறைகள் உருவாக்கப்பட்டது. ஏனெனில் நிர்ப்பிடிப்பு பகுதிகளின் கட்டிடங்கள் அனைத்தும் சுண்ணாம்பினால் செய்ததால், அருகாமையிலுள்ள நிலத்திலிருந்து வழிந்து வரும் நீரில் நச்சுப் பொருள் கலந்து நீர் நிலைகளை மாசுப்படுத்தி மனித இனத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

GMP Tractor

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013